தமிழ்நாட்டை விட்டு இன்று வெளியேறிய ’ராம ராஜ்ஜிய ரத யாத்திரை’ ஏன் தமிழ் நாட்டில் கடந்த நான்கு நாட்களாக கொந்தளிப்பை ஏற்படுத்தியது?
இந்த ரத யாத்திரையின் நோக்கம் தான் என்ன? அதன் கோரிக்கைகள் என்னென்ன?
1) உ.பி. மாநிலம் அயோத்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும்.
2) ராம ராஜ்ஜியம் அமைத்திட வேண்டும்(?!?).
3) பள்ளி, கல்லூரி பாட திட்டத்தில் இராமாயணத்தை இடம் பெற செய்ய வேண்டும்.
4) 'உலக இந்து நாள்' அறிவிக்க வேண்டும்.
5) ஞாயிற்றுகிழமை வார விடுமுறை என்பதை மாற்றி வியாழக்கிழமையாக கொண்டு வர வேண்டும்.
இதன் அறிவிப்பு குஜராத், மத்திய பிரதேச தேர்தலுக்கு முன் அறிவிக்க பட்டது. இந்த ரத யாத்திரை என்பது பாபர் மசூதி இடிப்பு வழக்கின் இறுதி நீதிமன்ற விசாரணையின் தருணத்தில் நடத்தப்படுகின்றது.
இந்த ரதம் அதன் கோரிக்கைகளோடு மக்களின் கையெழுத்துகளையும் பெற்று ஆதரவு திரட்டுகிறது.
(நண்பரிடம் கிடைத்த இன்னொரு தகவல் - இந்த ரதம் என்பது அதன் கோரிக்கைகளோடு அடுத்த 14 மாதங்கள்(14 வருட வனவாசம் போல) கேரளத்தில் காத்திருக்குமாம்! அப்படி நிறைவேற்றாமல் போனால் மீண்டும் பெரிய ஆளவில் இன்னொரு பிரச்சாரம் நடத்தப்படுமாம்.) இந்த தகவலின் படி பார்த்தால் மார்ச் 2018-ல் நிறுத்தப்படும் இந்த ரதம் என்பது ஏப்ரல் 2019 வரை காத்திருக்கும். நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரம். மற்ற எல்லா பிரச்சினைகளையும் மழுங்கடிக்க வைத்து ராமர் கோவில் விவகாரத்தை மையப்படுத்தி வாக்கு சேகரிப்பது இவர்களின் நோக்கம்.
எனக்கு எழும் சில சந்தேகங்கள்..
இப்போது ராமன் கோவில் கட்டி என்ன மாற்றம் வரப்போகிறது?! நாட்டின் பிரச்சினைகளை எல்லாம் ராமர் வந்து தீர்த்து வைக்க போகிறாரா?
இராமாயணத்தை பாட திட்டத்தில் சொல்லிக் கொடுத்துவிட்டு ராணுவத்தில்
வில்லும்-அம்பும் பயன்படுத்த போகிறீர்களா?
இந்திய அரசியல் சாசனம் என்பது மதச்சார்பின்மையானது. அதில் ஏன் உலக இந்து தினம் வேண்டும்?
வியாழன் விடுமுறை என்றால் இளைஞர்களின் வேலை வாய்ப்பு உறுதியாகிவிடுமா?
1990-ல் அத்வானியால் நடத்தப்பட்ட இதே ரத யாத்திரையால் பல மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டு பல மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக இஸ்லாமியர்கள்.
அன்று தமிழ்நாட்டில் கலவரங்கள் பெரிதாக நிகழவில்லை.
காரணம் இங்கு மத நல்லிணக்கம் இருக்கிறது. இந்த சூழலை மாற்றிடவும் பார்ப்பனியத்தை
நம் மீது திணித்திடவும் பல்வேறு வேலைகளில் பா.ஜ.க இறங்கி இருக்கிறது. அதில் இந்த
ரத யாத்திரையும் ஒன்று.இந்திய அரசியல் சாசனம் என்பது மதச்சார்பின்மையானது. அதில் ஏன் உலக இந்து தினம் வேண்டும்?
வியாழன் விடுமுறை என்றால் இளைஞர்களின் வேலை வாய்ப்பு உறுதியாகிவிடுமா?
1990-ல் அத்வானியால் நடத்தப்பட்ட இதே ரத யாத்திரையால் பல மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டு பல மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக இஸ்லாமியர்கள்.
இவர்களின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் படித்த பலரும் இதற்கு பகடைகாயாக மாறுவது தான் அவலம்.
இந்தியாவை இந்துத்துவாவாக மாற்றுவது ஒன்றே இதன் நோக்கம். இது மதச்சார்பின்மையை முற்றிலும் சீர்குலைக்கும். 2014 மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை எத்தனை கொலைவெறி தாக்குதல்கள் நடைபெற்றது என்பதை பார்த்தோம். நன்றி : புதிய தலைமுறை.
இவர்கள் சொல்லும் ராம ராஜ்ஜியம்
(இந்து ராஜ்ஜியம்) வந்தால் இத்தகைய கொலைகள் அதிகார பூர்வமாகவே அரங்கேறும்! அதை
நடத்த விட மாட்டோம் என்ற எச்சரிக்கையே தமிழர்களின் எதிர்ப்பு.
அன்புடன்
ஜெகன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக