2016! பள்ளி தேர்வு முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கிற நேரம். 2006-ஆம் ஆண்டு என் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி சரியாக பத்து வருடங்கள் கடந்து விட்ட நிலையில் நான் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறேன் என்று பார்க்கிறேன்.
2006-ல் தேர்வு முடிவுகள் வந்த நிலையில் அடுத்த கட்டமாக கல்லூரியில் சேர மற்றும் எந்த பட்டபடிப்பு பயில வேண்டும் என்று முடிவு செய்யும் தருணம் அது. என் விருப்பம் சினிமா சம்பந்தமான படிப்பு படிக்க வேண்டும். குறிப்பாக விஸ்.காம் என்று சொல்ல கூடிய Bsc.Visual Communication. ஆனால் என் பெற்றோர்கள் கூரியது இது தான். எங்களுக்காக பி.காம் படிப்ப இப்போ படி, அப்பறமா உனக்கு பிடிச்ச சினிமா வேலைய தேடிக்கோ. நானும் அவங்க பேச்ச கேட்டேன். பி.காம் எடுத்தேன்.
எவ்வளவோ விஷயத்துக்காக அப்பா அம்மா கிட்ட பிடிவாதம் பிடிச்ச நான் இந்த மிக முக்கியமான தருணத்தில் ரொம்ப தவறான அந்த முடிவை எடுத்தேன். தவறு தான்! காரணம் நாம படிக்கிற படிப்பு தான் நம்ம தொழிலை தீர்மானிக்கும். அதுக்காக தான நாம படிக்கிறோம்?
இப்போ பிரச்சனை என்னனா, இங்க இருக்கற நிறைய பெற்றோர்கள் இத தெரிஞ்சுக்கறதும் இல்ல! புரிஞ்சிக்கறதும் இல்ல!
Your children are not your children.
They are the sons and daughters of Life’s longing for itself.
They come through you but not from you,
And though they are with you yet they belong not to you.
They are the sons and daughters of Life’s longing for itself.
They come through you but not from you,
And though they are with you yet they belong not to you.
You may give them your love but not your thoughts,
For they have their own thoughts. – Khalil Gibran
For they have their own thoughts. – Khalil Gibran
கிப்ரானுடைய இந்த அழகான வரிகள் நினைவிற்கு வருகிறது!!
பொருள்:
உங்கள் குழந்தைகள் உங்கள் மூலமாக இந்த உலகிற்கு வருகிறார்கள். உங்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல! அவர்களுக்கு உங்கள் அன்பை காட்டுங்கள், உங்கள் கனவுகளை குடுத்துவிடாதீர்கள்!
நாம் அதையா செய்கிறோம்? நமக்கு கிரிக்கெட் வீரனாக ஆசை! அது நிறைவேறவில்லை. அதனால நம்ம குழந்தைய ஒரு கிரிக்கெட் வீரராக ஆக்க முயற்சிக்கிறோம்! ஆனா நம்ம குழந்தையோட ஆர்வம் ஓவியம் வரைவதில் தான்! இப்போ இங்க யோசிக்க வேண்டிய விஷயமே இது தான். கிரிக்கெட் மட்டையை வைத்து நல்ல ஓவியம் தீட்ட முடியுமா? ஒரு ஓவியராக முடியுமா? உங்கள் ஆசை என்னும் கட்டாயத்துக்காக உங்கள் பிள்ளையை கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்புகிறீர்கள். குழந்தை பயிற்சியில் ஆர்வம் காட்டுவதில்லை. சிறப்பாக கிரிக்கெட் விளையாட இயலவில்லை. இதில் மிக முக்கியமாக பார்க்கப்பட வேண்டியது – உங்கள் குழந்தைகள் உண்மையில் தங்களுக்கு ஆர்வம் உள்ள ஓவியத்தில் இருந்து திசை திருப்பப் படுகிறார்கள் . இது எவ்வளவு பெரிய தவறு என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்வது அவசியம். காலம் கடந்தபின் புரிந்து கொள்வதால் எந்த பயனும் இல்லை! பொறியியல் கல்லூரிகளுக்கு நன்கொடை, லட்சக்கணக்கில் கட்டணம் என்று பணம் செலுத்துவதை விட உங்கள் குழந்தைகள் விரும்பும் கல்விக்கு செலவிடுவது சரியானது. உங்கள் மகளின் கல்யாணத்திற்கு வரதட்சனை கொடுக்க சேர்க்கும் பணத்தை அவள் விரும்பும் துறைக்கு செலவிடுங்கள். அவர்கள் சுயமாக வாழ வழி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையை மட்டும் வாழுங்கள். உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையையும் சேர்த்து வாழ நினைக்காதீர்கள்!
இதே போன்று தான் உங்கள் பிள்ளைகளின் திருமண வாழ்க்கையும்! இதற்கு இன்றைய பெற்றோர்கள் கூறும் ஒரே பதில் என்னும் காரணம் – எங்க அப்பா அம்மா கிட்ட இப்படி பேசிட்டு இருக்க மாட்டோம். அவங்க சொன்னத செஞ்சோம். அவங்க சொன்ன ஆள தான் கல்யாணம் பண்ணோம். அவங்க சொன்ன படிப்ப தான் படிச்சோம். அன்றைக்கு சூழலே வேறு. நம்ம பாட்டன் காலத்துல ரெண்டு மனைவிகளோடு இருந்தார்கள். இன்றைக்கு நீங்கள் அப்படியா வாழ்கிறீர்கள்? உங்கள் தலைமுறைக்கான மாற்றம் என்று ஒன்று இருந்தது. அதை நீங்கள் அனுபவித்தீர்கள். இன்றைய தலைமுறைக்கான மாற்றம் இது தான். அதை தடுத்து நிறுத்தாதீர்கள். இதில் உங்கள் பிள்ளைகள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படவில்லை, இந்த சமூகத்தில் வாழும் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கிறது. சமூகம் இந்த நாட்டில் தான் உள்ளது. அதனால் நாட்டின் வளர்ச்சியும் சேர்ந்தே பாதிக்கிறது. இதுவரை பெற்றோர்கள் எப்படி தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் சமுதாயத்தை பாதிக்கிறார்கள் என்று பார்த்தோம்.
இப்போது உங்கள் சுயநலத்தால் எப்படி சமுதாயத்தின்(அதாவது இந்த நாட்டின்) மற்ற குழந்தைகளின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள் என்று பார்ப்போம். ஆம்! அரசு பணிகள் மற்றும் பிற அதிகாரங்களில் அமர்ந்து கொண்டு நீங்கள் செய்யும் ஊழல், லஞ்சம், மோசடி குற்றங்களால் இந்த நாட்டின் ஒவ்வொரு இளைஞன்(பிறர் வீட்டின் குழந்தைகள்) தலையிலும் கையை வைக்கிறீர்கள்! இதை சந்திக்க விரும்பாதவர்கள் எங்கு பிரச்சனை இல்லையோ அங்கு செல்கிறார்கள். இப்படி உங்கள் குழந்தைகளின் கனவுகளையும் திசை திருப்பிவிட்டு, அடுத்தவர் வீட்டு பிள்ளைகளின் கனவுகளையும் தடுத்துக் கொண்டு இருந்தால் நாடு எப்படி முன்னேறும்?
There can be no keener revelation of a society’s soul than the way in which it treats its children – Nelson Mandela
நெல்சன் மண்டேலாவின் வரிகள் – ஒரு குழந்தையை எவ்வாறு நடத்துகிறது என்பதை விடவும் ஒரு சமுதாயத்தின் மனநிலையை வெளிபடுத்த முடியாது.
நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் இருக்கிறது என்றாலும் அதற்கு அடிக்கல் அவர்கள் கல்வி, திறன், முன்னேற்றத்திற்கு தடை இல்லாத இன்றைய பெற்றோர்கள் தான்!
அன்புடன்
ஜெகன்
(30-5-2016)
ஜெகன்
(30-5-2016)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக